பட்டின் அழகால் தானோ
புழுவின் இறப்பு இயல்போ…
இசையின் மயக்கத்தால் தானோ
காற்று கிழிவது காதுகளுக்கு இயல்போ
தாளம் ஜதி …
கிறக்கத்தால் தானோ அவை விலங்குகளின்
தோல் கருவி என்ற உண்மை மறந்து போனதோ…
வாசனை சுபரிசத்தினால் தானோ
பூக்களின் மரணம் மாயமானதோ…
அலட்சியம் என்னும் கல் தானோ
முயற்சி என்ற கண்ணாடி உடைத்ததோ..
பயம் என்ற பகைவன் தான்…
மனிதத்தை அழித்தானோ…
என்ன நடந்தாலும்
எவர் கொல்லப்பட்டாலும்
எவர் துன்புற்றாலும்
உடைமை இழந்தாலும்
காணாமல் போனாலும்
கற்பும் போனாலும்
தனக்கு நேரவில்லை அது போதும் என்று
கண்டும் காணமல் இருப்பது தான்
மனிதனின் இயல்போ…
கு.சிவசங்கரி