இதுதான் வாழ்க்கை!

முட்டையிலிருந்து ஓட்டை உடைத்து
குஞ்சு வந்தால் அது ஜனனம்

எவரோ ஒருவர் முட்டையினை உடைத்து
குஞ்சுகள் பிறக்க உதவி செய்ய
அங்கே ஏற்படுவது மரணம்
இதுதான் வாழ்க்கை!

வழுக்கி விழுந்து பின் எழுந்து நின்றால்
அது குழந்தையின் சுயம்
(புதிதாக எழ கற்றுக் கொள்வதனால் அதுவும் ஜனனம்)

விழுந்து அழும் குழந்தையை
பிறர் ஓடிச்சென்று தாங்க
(அங்கே அழிக்கப்பட்டுகிறது சுயம். அதுவும் மரணமே)

வாழ்க்கை துயரங்களில்
போராடி வெல்லும் போது
பிறக்கும் நம்பிக்கை
வாழும் வரை வாழ வைக்கும்

ஒவ்வொரு தடைகளின் போதும்
பிறர் உதவியில் தப்பிக்க
இயல்பாக கிடைக்கும்
உணர்வு மழுங்கிய வாழ்க்கை

ஒவ்வொரு நொடியிலும் நாம்
புதிதாகப் பிறக்க
இயற்கை வரம் தர வேண்டும்!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942