வாடி நின்றால் வருத்தம் இறக்காது
தேடல் இல்லா வாழ்க்கை சிறக்காது
கண்ணீர் வடித்தால் கவலை பறக்காது
காலம் அழிந்தால் மீண்டும் பிறக்காது
இன்பங்கள் என்றும் இறந்து விடலாம்
துன்பங்கள் உன்னைத் துரத்தி வரலாம்
நிலையே இல்லா வாழ்க்கை இது
விலையே இல்லா வைரம் இது
நீரை வெறுத்தால் நீச்சல் ஏது?
வேரை வெட்டினால் விருட்சம் ஏது?
வாழ்வெனும் போரில் வலிமை தூது
வலிகளில் சிரித்தால் வெற்றி உனது
இழைகள் இல்லாமல் நூலில்லை
பிழைகள் இல்லாமல் வாழ்வில்லை
புன்னகை வாழ்வெனும் போர்க்கள ஆயுதம்
புரிந்து நடந்தால் நீ அழியாத ஓவியம்
பூமி உன்னைப் புகழ்ந்து கூறும் -மனப்
புண்கள் எல்லாம் ஓர்நாள் ஆறும்
எந்த நிலையும் வாழ்வில் மாறும்
இதுவும் நாளை கடந்து போகும்
த . கிருத்திகா
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!