இது சத்தியம்!

வருடாந்திர விற்பனை கான்பெரென்ஸ் முடிந்து, பெங்களூரு ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் இருந்து அவசரம் அவசரமாக ரயில்வே ஸ்டேஷன் வந்தான் விஜய். அன்று இரவு கித்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹூப்ளி பயணம்.

1980-81 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட் மற்றும் டார்கெட் தயாரிப்பில், சென்னையிலிருந்து வந்திருந்த மேல்நிலை மானேஜர்களுடன் மூன்று நாட்கள் ‘வெஸ்ட் எண்ட்’ ஹோட்டலில் மூழ்கியிருந்ததால், விஜய்யால் ரயில் டிக்கட் ரிசர்வ் செய்ய முடியவில்லை.

அப்போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் நேரே சென்று நீண்ட வரிசையில் நின்று ரிசர்வேஷன் செய்ய வேண்டும். பின்னால் நிற்பவர் உங்கள் பிடரியில் மூச்சு விட்டு கொண்டிருப்பார். இருந்தும் அப்போது விஜய்க்கு நேரம் இல்லை.

முன்பதிவு இல்லாமல் இதற்கு முன்பு இது போன்ற பல பயணங்களை அசால்ட்டாக மேற்கொண்டவன் என்பதால், டிக்கட் பரிசோதகர் கருணை காட்டினால் பயணம் செய்யலாம் என்று ஸ்டேஷன் விரைந்தான் விஜய்.

மெடிக்கல் பேக், சூட்கேஸுடன் டிக்கட் கவுண்ட்டரை அணுகி ஜெனரல் டிக்கட் ஒன்று ஹூப்ளிக்கு எடுக்க முயன்றபோது யாரோ முதுகில் தட்டியதில் திடுக்கிட்டு திரும்பினான் விஜய்.

விஜய்யை ஒத்த வயதுள்ள வாலிபன் ஒருவன், “சார்! நீங்க ஹூப்ளிக்கு போறீங்களா? ஒரு சின்ன உதவி பண்ண முடியுமா? நான் ஹூப்ளிக்கு ரிசர்வ் பண்ணியிருந்தேன், பர்த் டிக்கட். ஆனால் நான் போகமுடியாது,

ஏன்னா என் அக்கா சீரியஸ். நான் உடனே ஆஸ்பத்திரிக்கு போகணும்!

பார்க்க பாவமாய் இருந்தது. விஜய்யும் நன்றாக தூங்கி வெகுநாளாச்சு என்பதால் அப்பர் பர்த்தில் ஏறி படுத்தால் காலை 6 மணிக்கு ஹூப்ளி வரும் வரை தூங்கலாம் என்று நினைத்து அந்த இளைஞனின் டிக்கட்டை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ‘கித்தூர் எக்ஸ்பிரஸி’-ல் ஏறிக் கொண்டான்.

அப்பர் பர்த்தில் உடைமைகளை வைத்துவிட்டு ‘இர்விங் வால்லசின்’ ‘தி மேன்’ நாவலை விட்ட இடத்திலிருந்து மூன்று நாட்களுக்கு பிறகு படிக்க ஆரம்பித்தான்.

விஜய் ஒரு புத்தக பகாசூரன். தென் இந்தியா முழுக்க பல ஊர்களில் வேலை செய்த விஜய், எந்த ஊருக்கு மாற்றல் ஆனாலும், அந்த ஊரில் முதலில் ஒரு லெண்டிங் லைப்ரரியில் மெம்பர் ஆவது அவன் தலையாய கடமை.

மருந்து விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரியும் அவன் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது அவன் வெற்றி ரகசியங்களில் ஒன்று.

மேலும் பல டாக்டர்களோடு உரையாடும்போது அவர்களுக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க ஆசை இருந்தால், அவர்களிடம் தன் நாவல்களை கொடுத்து அவர்கள் நாவல்களை வாங்கிக் கொள்வான். இதனால் அவனுக்கு பல டாக்டர்களிடம் நல்ல நட்பும் தொடர்பும் இருந்தது.

புதிய தலைமுறை விற்பனைப் பிரதிநிதிகள் மருத்துவ அறிவும், ஆளுமைப் பயிற்சியும் நிரம்பப் பெற்று, ஒவ்வொரு மூன்று மாத குவாட்டர்லி ‘கான்பிரன்ஸி’லும் மண்டையை உடைக்கும் ட்ரைனிங் பெற்று, தன்னம்பிக்கை ஒளி வீசும் ‘ஆண்டனி ராபின்ஸ்’ ஆல்பா ஆண்கள்.

அதுவும் விஜய் எப்பொழுதும் தன்னை புதிப்பித்துக் கொண்டே இருப்பவன்.
ரயில் புறப்படும் சமயத்தில், நான்கு பேர் ஏறினர்.

அவசரம் அவசரமாக அவர்கள் ரயிலில் ஏறியதால் மூச்சு வாங்கியபோது அவர்களிடமிருந்து ஆல்கஹால் வாசனை! அவர்கள் தத்தம் பெட்டிகளை ‘தாம் தூம்’ என்று அதிரடியாக வைத்தனர்.

ரயில் புறப்பட்டு சற்று நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்தார். அந்த நால்வரின் அதீத அரட்டையும் விஸ்கி வாடையும் அவரை சற்று அருவருப்புக்குள்ளாக்கியது .

அவர்களுடைய டிக்கட், பெயர், வயது, பர்த் நம்பர் அனைத்தையும் ஸ்ட்ரிக்ட்டாக செக் செய்தார்.

அவரின் கறார் தோரணை அந்த நால்வருக்கும் பிடிக்கவில்லை. ஆல்கஹாலின் தெனாவெட்டு தெறிப்பில் டிக்கட் பரிசோதகரிடம் சற்று முரட்டுத்தனமாக “நாங்க நாலு பேரும் எஞ்சினீயர்ஸ், ஹைடெல் ப்ரொஜெக்ட்டிலிருந்து வர்றோம், இது ஆபிஸ் புக் செய்த டிக்கட்ஸ். எதுக்கு நோண்டி நோண்டி எல்லா விபரங்களையும் க்ராஸ் செக் பண்றீங்க?” என்று வாக்குவாதம் செய்தனர். விஸ்கி அவர்கள் சப்தத்தை இன்னும் விஸ்தீரணப்படுத்தியது.

டி.டி.ஈ. பொறுமையாக தான் தன் கடமையை செய்வதாக சொல்லி அவர்களை பரிவுடன் நடத்தினார்.

அவர்கள் “நாங்களும் எக்ஸ்ட்ரா பணம் பர்த்திற்கு வாங்கும் டி.டி.ஈ.க்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்று நெருப்பில் நெய் விட்டனர்.

நிலைமை சற்று எல்லைமீறிப் போவதை உணர்ந்த விஜய்யும் தன் பங்குக்கு அவர்களை சமாதானப்படுத்த முயன்றான்.

அவர் பக்கத்திலேயே விஜய், அஷ்ரப் அலி என்ற இளைஞனின் டிக்கட்டில்!

இந்த சச்சரவால் திடீரென்று விஜய்யின் பயணம் நரகமாகியது. அவனுக்கு ரயிலிலிருந்து எப்படியாவது குதித்தாவது தப்பிக்க வேண்டும் என்று தோன்றியது.

டிக்கட் பரிசோதகர் அவன் டிக்கட்டை செக் செய்தால் மானம் போய் விடும். அடுத்த ஸ்டேஷன் தும்கூரில் இறங்கி வேறொரு பஸ்ஸிலோ, ரயிலிலோ சென்றால் புண்ணியம் என்று நினைத்துக்கொண்டே பாத்ரூம் சென்றான்.

டென்ஷன் தாங்காமல் கடவுளை வேண்டிக் கொண்டான்.

‘கடவுளே! இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னை காப்பாற்று! இனிமேல் ஜென்மத்திற்கும் வேறொருவர் டிக்கட்டில் பயணம் செய்யமாட்டேன் ! இது சத்தியம்!’ என்று சூளுரைத்துவிட்டு வெளியே வந்தான்.

அனைத்து பயணிகளின் டிக்கட்களையும் செக் செய்துவிட்டு மீண்டும் அந்த நால்வரின் முன்பு வந்து அமர்ந்தார் டி.டி.ஈ.

போதாக்குறைக்கு அங்குதான் அவருக்கும் இரவில் உறங்க பர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. அது ஒரு மீட்டர்காஜ் ரயில் என்பதால் ஒவ்வொரு போகி பிரிவிலும் மொத்தம் ஆறு பர்த் மட்டுமே.

நால்வர், விஜய், டி.டி.ஈ ஆகியோர் ஹூப்ளி வரை அவைகளில்தான் உறங்க வேண்டும். எனவே இந்த வாக்குவாதம் இன்னும் தொடர வாய்ப்பு உண்டு.

பாத்ரூமிலிருந்து வந்து அமர்ந்த விஜய் ‘வருவது வரட்டும்! தான் ஆள் மாறாட்ட டிக்கட்டில் பயணிப்பதாக டி.டி.ஈ இடம் ஒத்துக்கொண்டு, தண்டம் கட்டிவிட்டு பயணத்தை தொடருவோம்’ என்று தீர்மானித்து அவன் வாய் திறந்து சரண் அடைவதற்குள்

விஜய்க்கு லாட்டரியில் ஒரு கோடி அடித்தது போல இருந்தது. மானசீகமாக இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு நன்கு உறங்கிய விஜய் மறுநாள் காலை ஹூப்ளி ரயில்வே ஸ்டேஷன் அடைந்த பிறகுதான் விழித்து இறங்கினான்.

அந்த நால்வரும் இன்னும் அந்த டி.டி.ஈ-யை நினைத்து முணுமுணுத்தபடியே இறங்கினர்.

விஜய் “போய் வருகிறேன்” என்று அவர்களிடம் சொல்லியவாறே,

மேலேயிருந்து கடவுள் ‘அடப்பாவி! நான் உன்னை காப்பாற்றினேன்! நீ அவர்களிடம் பெருமை பேசிக் கொள்கிறாயா?’ என்று சிரித்தார்!

“சத்தியத்தை மீறி இன்னொரு முறை கோயம்புத்தூரில் இருந்து ஆள் மாறாட்ட டிக்கட்டில் சென்னை வரும்போது அரக்கோணத்தில் பிடிபடுவாய்! அப்போது நான் உன்னை கைவிட்டு விடுகிறேன்!” என்று கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னது அப்போது விஜய்க்கு கேட்கவில்லை!

ஜெ.ஜெயகுமார்
சென்னை
98842 51887