இந்தியாவில் சினிமாவுக்கான உயர்ந்த விருது தாதா சாஹிப் பால்கே விருது.
முதன்முதலாக தாதா சாஹிப் பால்கே விருதைப் பெற்றவர் : தேவிகா ராணி (1969).
தாதா சாஹிப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் (1996). திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் 2010 ஆம் ஆண்டு தாதா சாஹிப் பால்கே விருது பெற்றார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பாரத் விருது என்றும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஊர்வசி என்றும் முன்பு அழைக்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள் எம்.ஜி.ஆர்., கமலஹாசன், விக்ரம், பிரகாஷ்ராஜ், தனுஷ். சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்., ‘ரிக்ஷாக்காரன்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
கமலஹாசன் சிறந்த நடிப்புக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். கமலஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துக்காக பெற்றார். கமலஹாசன் ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘இந்தியன்’ படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்
நடிகர் விக்ரம், ‘பிதாமகன்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் – 2003.நடிகர் பிரகாஷ்ராஜ், ‘காஞ்சிவரம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் – 2008. நடிகர் தனுஷ், ‘ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார் – 2010.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகைகள் : லட்சுமி, சுகாசினி, பிரியாமணி, சரண்யா பொன்வண்ணன்.லட்சுமி, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். சுகாசினி, ‘சிந்து பைரவி’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். பிரியாமணி, ‘பருத்திவீரன்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.சரண்யா பொன்வண்ணன், ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இளையராஜா மூன்று முறை பெற்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் வைரமுத்து.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது – நர்கீஸ் தத் விருது. இயக்குநர் மணிரத்னத்தின் ‘ரோஜா’, ‘பாம்பே’ படங்கள் நர்கீஸ் தத் விருது பெற்றுள்ளன.
புதுமுக இயக்குநரின் முதல் சிறந்த படத்துக்கான தேசிய விருது : ‘இந்திரா காந்தி விருது’. ‘மோக முள்’ படத்துக்காக இந்திரா காந்தி விருதைப் பெற்றவர் ஞானராஜசேகரன்.
சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் ‘மலைக்கள்ளன்’. சிறந்த படத்துக்கான ‘தங்கத் தாமரை’ விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் ‘மறுபக்கம்’.
சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குநர்கள் : அகத்தியன் (காதல் கோட்டை), பாலா (நான் கடவுள்), வெற்றிமாறன் (ஆடுகளம்).
60வது தேசிய விருதுகளில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை (விஸ்வரூபம்) திரைப்படத்துக்கு நடனம் அமைத்த கதக் நடன கலைஞர் பிர்ஜூ மஹராஜ் பெற்றார். மேலும் சிறந்த ஆடை அலங்காரத்துக்கான விருதை (பரதேசி) திரைப்படமும், சிறந்த ஒப்பனைக்கான விருதை (வழக்கு எண் 18) திரைப்படமும் பெற்றன.
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வாழ்நாள் சாதனையாளர் விருது ஏற்படுத்தப்பட்டு அந்த விருது முதன் முறையாக ஹிந்தி நடிகை வாஹிதா ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!