ஜன கண மன அதிநாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத மாராட்டா
திராவிட உத்கல பங்கா
விந்திய ஹிமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆசிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கண மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே
ஜய ஜய ஜய ஜய ஹே
பொருள்
இந்திய தாயே மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்
நின் திருப்பெயர் பஞ்சாப்பையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும் திராவிடத்தையும் ஒரிசாவையும்
வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில்
எதிரொலிக்கிறது யமுனை,கங்கை ஆறுகளின்
இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடலலைகளால்
வணங்கப்படுகிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே, உனக்கு
வெற்றி! வெற்றி! வெற்றி!
– இரவீந்திரநாத் தாகூர்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!