இந்திய கொடையாளிகள் 2016

இந்திய கொடையாளிகள் 2016 ‍- ஹூரன் நிறுவனம் தயாரித்த‌ 2016-ஆம் ஆண்டில் நிறைய நன்கொடை அளித்த இந்தியர்களின் பட்டியல்.

இப்பட்டியல் தயார் செய்ய 10 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை அளித்தவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சிஎல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவரான சிவ் நாடார் 630 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து முதல் இடத்தில் இப்பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

இன்போஸிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான கிரிஷ் கோபால கிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 313 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

303 கோடி ரூபாய் நன்கொடையளித்து மூன்றாவது இடத்தில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உள்ளார்.

2106-ல் மொத்தம் 27 நன்கொடையாளர்கள் ஹூரன் நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் 2015 ஆண்டில் 36 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டில் மொத்தம் 2334 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

2016-ல் இடம் பெற்றுள்ள நன்கொடையாளர்களில் ஆதித்யா பிர்லா நிறுவனத்தைச் சார்ந்த குமார் மங்கலம் பிர்லா இளவயதினர் (49) ஆவார்.

பலோன்ஞ்சி குழுமத்தைச் சார்ந்த ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி வயதில் மூத்தவர் (87) ஆவார். 2016 – இந்திய நன்கொடையாளர்களின் சராசரி 86 கோடி ரூபாய் ஆகும்.

2016-ல் உள்ள 27 நன்கொடையாளர்களில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு பெண் நன்கொடையாளர்கள் 14 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயோகானைச் சார்ந்த கிரண் மசூம்தார் ஷா, ஜிண்டால் குழுமத்தைச் சார்ந்த சாவித்ரி ஜிண்டால் ஆகிய பெண் நன்கொடையாளர்கள் முறையே 45 கோடி, 53 கோடி ரூபாய்களை நன்கொடைகளாக அளித்து 2016-ம் ஆண்டின் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அதானி குழுமத்தைச் சார்ந்த கௌதம் அதானி, இஎம்கேஇ குழுமத்தைச் சார்ந்த மா யூசப் அலி மற்றும் லுபின் நிறுவனத்தைச் சார்ந்த தேஷ் பாண்டு குப்தா ஆகியோர் முறையே 20 கோடி, 19 கோடி மற்றும் 10 கோடி ரூபாய் நன்கொடை அளித்து 2016-ஆம் ஆண்டின் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.

2016-ம் ஆண்டு நன்கொடையின் 35 சதவீதமானது கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றிற்காக வழங்கப்பட்டுள்ளது. இனி நன்கொடையாளர்களின் பட்டியலைப் பற்றிப் பார்ப்போம்.

 

வரிசை எண் நன்கொடையாளரின் பெயர் நன்கொடை 2016 (கோடியில்) நன்கொடை 2015 (கோடியில்) சொத்து மதிப்பு (கோடியில்)
1 சிவ் நாடார் 630 535 73,000
2 கிரிஸ் கோபால கிருஷ்ணன் ரூ குடும்பத்தினர் 313 38 8,400
3 முகேஷ் அம்பானி 303 345 163,400
4 சைரஸ் பூனவாலா 250 65 83,000
5 ராகுல் பஜாஜ் & குடும்பத்தினர் 244 139 20,700
6 ரோனி ஸ்க்ரூவாலா 160 158  
7 அஜய் பிரமல் 111 52 14,900
8 கோத்ரேஜ் குடும்பத்தினர் 75 85 78,500
9 ஷபூர்ஜி பல்லோஞ்சி மிஸ்த்ரி 68 96 101,100
10 சாவித்ரி ஜிண்டால் குடும்பத்தினர் 53 83 35,000
11 கிரண் மஜூம்தார் ஷா 45 16 10,800
12 அனில் அகர்வால் குடும்பத்தினர் 44 95 13,700
13 அஜிம் பிரேம்ஜி குடும்பத்தினர் 34 27,514 74,700
14 ஆசாத் மூப்பன் 32 32 7,400
15 ஆனந்த் புர்மான் குடும்பத்தினர் 24 15 41,800
16 குமார் எம் பிர்லா குடும்பத்தினர் 21 70 45,500
17 கௌதம் அதானி 20 0 42,400
18 அனில் அம்பானி குடும்பத்தினர் 19 30 28,500
19 மா யூசப் அலி 19 0 36,600
20 ரவி பிள்ளை 15 13 18,800
21 டி.எஸ்.கல்யாணராமன் 10 12 5,600
22 நாராயண மூர்த்தி குடும்பத்தினர் 14 1,322 10,400
23 சுனில் மிட்டல் குடும்பத்தினர் 13 18 50,300
24 சுபாஷ் சந்திரா குடும்பத்தினர் 12 12 35,100
25 பங்கஜ் படேல் குடும்பத்தினர் 12 11 31,000
26 ஹார்ஷ் மாரிவாலா குடும்பத்தினர் 11 11 19,600
27 தேஷ் பாண்டு குப்தா 10 0 40,400

இவர்களைப் போல் நம்மால் நன்கொடை அளிக்க முடியாவிட்டாலும் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவுவோம்.

 

One Reply to “இந்திய கொடையாளிகள் 2016”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.