இந்திய மாநில பறவைகள் என்பவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் அடையாளமாக உள்ள பறவைகளாகும்.
இந்தியாவானது 29 மாநிலங்களையும், 7 யூனியன் பிரதேசங்களையும் கொண்டுள்ளது. இவை தங்களுக்கென தனி பறவைகளை மாநில பறவைகளாகக் கொண்டுள்ளன.
டையூ மற்றும் டாமன், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் மாநில பறவைகளைக் கொண்டிருக்கவில்லை.
ஒவ்வொரு மாநிலத்தின் பறவை மற்றும் அதன் அறிவியல் பெயரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இந்திய மாநில பறவைகள்
ஆந்திர பிரதேசம்
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்
அருணாசல பிரதேசம்
மலைஇருவாட்சி – புசிரேஸ் பைகார்னிஸ்
அஸ்ஸாம்
வெள்ளைஇறகு காட்டுவாத்து – அசார்ஸ்கோனிஸ் ஸ்குட்லட்டே
பீகார்
சிட்டுக்குருவி – பாஸசர் டொமஸ்டிகஸ்
சட்டீஸ்கர்
மலைமைனா – க்ராக்குலா மதீலியாஸ்
கோவா
கறுப்புக் கொண்டை புல்புல் – பிக்னொனோட்டஸ் குலோர்ஸ்
குஜராத்
பெரும்பூ நாரை – பீனோகாப்டஸ் ரோஸ்டஸ்
அரியானா
கருப்பு பிராங்கோன் – பிரான்சினியஸ் பிரான்காலினஸ்
இமாச்சல பிரதேசம்
மேற்கத்திய டிராகோபன் – டிராகோபன் மெலனோசெஃபாலாஸ்
ஜம்மு-காஷ்மீர்
கறுப்பு கழுத்து கொக்கு – கிரஸ் நைரிகோலஸ்
ஜார்க்கண்ட்
ஆசியக் குயில் – எடினாமாஸ் ஸ்கொலபோஸஸ்
கர்நாடகா
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்
கேரளம்
மலைஇருவாட்சி – புசிரேஸ் பைகார்னிஸ்
மத்திய பிரதேசம்
அரசவால் ஈ பிடிப்பான் – தர்சிபென் பராடிசி
மஹாராஷ்டிரா
பச்சைப்புறா – ட்ரோன் ஃபொனோகாப்டர்
மணிப்பூர்
ஹியூம்ஸ் ஃபேஸன்ட் – சிர்மாடிமஸ் ஹேமியா
மேகாலயா
மலைமைனா – க்ராக்குலா மதீலியாஸ்
மிசோரம்
ஹியூம்ஸ் ஃபேஸன்ட் – சிர்மாடிமஸ் ஹேமியா
நாகாலாந்து
பிளைட் ட்ரகோபன் – டிராகோபன் பிளைத்தி
ஒடிசா
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்
பஞ்சாப்
வடக்கு கோஸ்ஹாக் – அசிபிட்டர் ஜென்ட்லிஸ்
ராஜஸ்தான்
கானமயில் – அர்டோடிஸ் நைஜிரைஸ்
சிக்கிம்
சிவப்பு பியாசான்ட் – இக்டினஸ் க்ரூண்டஸ்
தமிழ்நாடு
மரகதப்புறா – சால்கோபாப்ஸ் இண்டிகா
திரிபுரா
பச்சை ஏகாதிபத்திய புறா – டுக்குலா அனினா
தெலுங்கானா
பனங்காடை (பாலக்குருவி) – கோரேசியா பென்காலென்சிஸ்
உத்திரபிரதேசம்
சராசு கொக்கு – ஆன்டிகோன் ஆன்டிகோன்
உத்தரகாண்ட்
இமாலய மோனல் – லோபோபோரஸ் இம்ப்ஸிஜனாஸ்
மேற்கு வங்காளம்
வெண்தொண்டை மீன்கொத்தி – ஹால்சிசன் ஸ்மிர்மினெசிஸ்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
அந்தமான் மரப்புறா – கொலம்பா பால்ம்போயிட்டுகள்
சண்டிகார்
இந்திய சாம்பல் இருவாட்சி – ஓசிசோரோஸ் பைரோஸ்டிரிஸ்
டெல்லி
சிட்டுக்குருவி – பாஸசர் டொமஸ்டிகஸ்
லட்ச தீவுகள்
சூட் டெர்ன் – ஓனிச்சோபிரியன் ஃபுஸ்காட்ஸ்
பாண்டிச்சேரி
ஆசியக் குயில் – எடினாமாஸ் ஸ்கொலபோஸஸ்
தமிழ்நாட்டை தாயகமாகக் கொண்ட பறவைகள்
பறவைகளின் அலகுகள் பற்றி அறிவோம்
பறவைகளின் பாதங்கள் மற்றும் நகங்கள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!