2016ல் நடக்க இருக்கும் ஒலிம்பிற்கு இந்தியா தகுதி அடைந்துள்ளது என்பது சற்று மகிழ்ச்சி.
காரணம் என்னவென்றால் ஆசிய விளையாட்டில் 16 வருடங்களுக்குப் பின் இந்தியா தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.
“பிரிமியர் ஹாக்கி லீக்” என்னும் போட்டிகள் 2005 முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகின்றன. தற்பொழுது நம் கிரிகெட் அணியின் கேப்டன் தோனி ராஞ்சி அணியை லீக் போட்டிக்காக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல ஹாக்கி வளர்ச்சிக்கு ரூ.25 லட்சத்தை கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் பல முன்னனி நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் பெயரில் அணியை நிறுவ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு நிதி உதவிகளையும் பல வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கி தர வேண்டும். இன்னும் பல டர்ப் மைதானங்களை அமைத்து உலக அரங்கில் மீண்டும் நம்பர் 1 ஆக திகழ வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் ஆசை. இழந்த புகழை மீண்டும் நிலைநாட்ட வேண்டும்.
– த.முருகேசன்