இனிக்கும் பாட்டு பாடுவேன்! – காலை
எழுச்சிப் பாட்டு பாடுவேன்!
கனிபி ழிந்த சாற்றைப் போலக்
காதில் இனிக்கப் பாடுவேன்!
குயிலைப் போலப் பாடுவேன்! – சின்னக்
குருவி போலப் பாடுவேன்!
அயலில் ஓடும் அருவி போல,
ஆற்றைப் போலப் பாடுவேன்!
வண்டு போலப் பாடுவேன்! – தேன்
வண்டு போலப் பாடுவேன்!
உண்டு றங்கிக் கண்வி ழித்த
உடனெ ழுந்து பாடுவேன்!
தந்தை வாழ்த்திப் பாடுவேன்! – ஈன்ற
தாயை வாழ்த்திப் பாடுவேன்!
எந்த நாளும் தமிழை வாழ்த்தி
இனிக்க இனிக்கப் பாடுவேன்!
– கவிஞர் வாணிதாசன்