ஈய்வது இனிது

இனிது வேறுண்டோ? – கவிதை

இனிது இனிது

வானின் நிலவு இனிது

நிலவின் அழகு இனிது

சுவைக்கத் தேன் இனிது

பருகப் பால் இனிது

மாதத்தில் மார்கழி இனிது

மலர்களில் ரோஜா இனிது

மக்கள் தம் மழலை இனிது

சாப்பிடப் பிரியாணி இனிது

படிக்கப் பத்திரிக்கை இனிது

வாழ்வில் தேடல் இனிது

தேடலில் வெற்றி இனிது

வாழ்வில் எல்லாம்

இனிதெனப் பெற்றவர்

தன்னிடம் இருப்பதில்

சிறிதேனும் இல்லாதவர்க்கு

கொடுத்திட்டால் அதனினும்

இனிது வேறுண்டோ?

ரோகிணி