நாம் உண்ணும் உணவு
நம் உடலையும் உணர்வினையும்
தாங்கி நிற்கும் காரணிகள்!
ஆணுமில்லா பெண்ணுமில்லா
பிராய்லர் இறைச்சி
நமக்கு என்ன உடலைத் தரும்?
தாங்கிப் பிடிக்கும் இடைமரமில்லாத
பழ மரங்களில் விளைந்த கனி வகைகள்
நமக்கு எந்த உடல் உறுப்புக்கு பலத்தை தரும்?
விதைகளே இல்லாத பழ வகைகள்
நமக்கு என்ன விளைவைத் தரும்?
இது தவிர இராசாயனங்களாலே
உருவாக்கப்பட்ட துரித உணவு வகைகள்
நமக்கு எவ்விதமான உணர்வைத் தரும்?
இரத்த சுத்திகரிப்பு
செயற்கை கருத்தருப்பு
போன்ற மையங்கள் பெருக
உணவு முறைகளே காரணமாக உள்ளதோ
என்ற சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது!
இயற்கை துணையுடன் இனிய உணர்வை
இனிய உடலை பெற்று இனிதே
வாழ முயற்சி செய்யலாமே!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!