இனிப்பு என்ற சுவைக்கு என்பதற்கு தமிழில் தித்திப்பு, மதுரம் தேம் - (தேமதுரம்), அமுது என பல பதங்கள் உள்ளன.
சர்க்கரை என்ற பொருளுக்கு அக்காரம்- அக்காரை- வெல்லம் -அட்டு -(கருப்பு அட்டு கருப்பட்டியாக) என பல பெயர்கள் உள்ளன.
நம் பாரம்பரிய இனிப்புகளில் பணியாரம், அதிரசம், அங்கார அடிசில், சர்க்கரை பொங்கல், சர்க்கரை கொழுக்கட்டை, புட்டு மற்றும் மாவிளக்கு என எண்ணெயில் பொரிக்கப்பட்டதை விட, வேக வைத்த உணவுகளே மிகுதியாக இருந்தன.
இன்று வங்காள வந்தேறி இனிப்புகளும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பஞ்சாப் வழி படையெடுத்து வந்த அல்வாவுமே முக்கிய இனிப்பு வகைகளாக, எண்ணெய் டால்டா போன்றவற்றில் ஊறி மிதப்பவைகளாக உள்ளன.
உடல் நலன் கெடுக்காத நம் பாரம்பரிய இனிப்புகளை பின்னுக்குத் தள்ளி விட்டு (ரோட்டோரக் கடைகளில் பணியாரம்) கண்ணைக் கவரும் வண்ணங்களில் மினுமினுப்பு காட்டும் இனிப்புகளால் தான் இன்று பிறக்கும் போதே (சர்க்கரை நோயுடன்) கவச குண்டலமாக உடலோடு ஒட்டியபடி குழந்தைகள் பிறக்கின்றன.
பளபளக்கும் இனிப்புகள் எல்லாம் இனிதல்ல
பாரம்பரிய இனிப்புகளே உடலுக்கு இனிது
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!