இனிது
Written by
in
கம்பனுக்குக் கவி இனிமை
பூவிற்கு நறுமணம் இனிமை
பூவையர்க்கு திருமணம் இனிமை
நாவிற்கு நற்றமிழ் இனிமை
பாட்டுக்கு சந்தம் இனிமை
நாட்டுக்கு வசந்தம் இனிமை
பிணி தீர மருத்துவம் இனிமை
மனிதனுக்கு எது இனிமை
மனித நேயமே இனிமை!