ஊரு காக்கும் அய்யனாரே
உண்மையை சொல்லுமையா!
ஊருக்குள்ளே முதன்முதலா
மாட்டுப்பண்ணை வச்சிருந்த
மாயாண்டி எங்க போனார்?
ஊருக்குள்ளே முதன்முதலா
வானொலி செய்தி கேட்ட
வாத்தியார் எங்க போனார்?
ஊருக்குள்ளே முதன்முதலா
மச்சு வீடு கட்டி வச்ச
மன்னாரு என்ன ஆனார்?
ஊருக்குள்ளே முதன்முதலா
வில்லு வண்டி கொண்டு வந்த
வேலய்யா எங்க போனார்?
மாட்டுப்பண்ணை மறைஞ்சாலும்
பாக்கெட் பால் இருக்கு
வானொலி தான் மறைஞ்சாலும்
கைபேசி துணையிருக்கு
மச்சு வீடு மாறைஞ்சாலும்
அடுக்குமாடி வந்தாச்சு
வில்லுவண்டி மறைஞ்சாலும்
காரும் பைக்கும் வந்தாச்சு
ஊரு காக்கும் அய்யனாரே
உண்மையை சொல்லுமையா
எல்லாமே நிலையின்றி தன்னால
மாறக் கண்டும்
பாவி இந்த மனுசன்
இன்னும் இயற்கையை அழிப்பதேன்?
இனிய வளங்களை இழப்பதும் ஏன்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!