இன்றைக்கு வந்தது தீபாவளி
இனிமையை நமக்கு தந்தபடி
துன்பத்தின் குரல்வளை நெறித்தபடி
துயரங்கள் எல்லாம் தொலைத்த படி
வண்ணத்தில் ஆடைகள் ஏற்றபடி
வளமையை வாழ்வினைப் பெருகும்படி
மண்ணில் மாந்தர்கள் மகிழும்படி
மாமழை எங்கும் பொழிந்தபடி
அன்பினால் மக்களை ஈர்க்கும் படி
ஆண்டுகள் பலவாய் தொடருதடி
இன்று போல் நாமும் இணைந்தபடி
இனிவரும் காலம் வாழும்படி
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!