சிறிய எறும்புக்கு அது வாழும் பகுதியே உலகம்
பருந்துக்கோ அது பார்ப்பதே உலகம்
அடுத்த 50 மைல் தொலைவினை
அரைநாளில் கடந்தவன் தேர்ச்சி
பெற்றவனாகக் கருதப்பட்டது ஒருகாலம்
கையடக்க கருவிக்குள் பரந்த
உலகினைப் புகுத்திக் காண்பது
இன்றைய காலம்
இதை சற்று உணர்ந்தால் போதும்
பில்லி சூனியம் ஏவல்
பாவம் பரிகாரம் போன்றவை
அழிந்து மறைந்திருக்க வேண்டும்
ஆனால் பாவம் மக்கள்
ஆசையினாலும்…
பயத்தினாலும்…
இன்னும் இந்த உண்மையை
உணராதிருப்பது இழுக்கு
கைபேசி: 9865802942