கிராமத்துப் பசுமையில்
முகம் புதைக்கும் மரங்கள்…
மரங்கள் தாகத்திற்கு
தண்ணீர் கொடுக்க
அருகில் ஓடும் நதிகள்…
பழங்கள் உண்டு
பசியாற மரங்கள் மீது
பறவைகள்…
பசுக்கள் மேய தானே
மண்மீது படுத்துக் கொண்ட
புல்வெளிகள்…
எங்கிருந்தோ ஓடிவந்த
எறும்பு ஒன்று தண்ணீரில்
விழுந்து தத்தளித்தது…
காற்றின் இசைக்குத்
தலையாட்டிய மரம்
உதிர்த்து விட்ட இலை ஒன்று
நதியின் ஜதிக்கு
நடனமாடி வந்து
தத்தளித்த எறும்பை
தன் முதுகில் சுமந்து
கரை சேர்த்தது…
மனிதாபிமானம்
மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை!
ரோகிணி
Very nice