நீர்நிலம் காற்றென பூதங்கள் ஐந்து சொல்வதைக் கேளு
நித்தம் மனிதர் செய்யும் தவறுகள் திருத்துவது யாரு
சீர்கெடும் சூழலில் காரணம் என்ன சிந்தித்துப் பாரு
செயற்கை தவிர்த்து இயற்கையாய் வாழ்ந்து பாரு
வேர்முதல் விதைவரை தாவர வாழ்வினை உற்றுப்பாரு
வீணென விதைகள் இருந்திட்டால் விருட்சங்கள் ஏது?
கார்முகில் மழையினை மறைப்பதன் காரணம் தேடு
காற்றினில் மாசுக்கள் கலப்பதால் வந்தது கேடு
கூர்என இருக்கும் முட்களினால் பயன் என்னகூறு
குவிதல் மலர்தல் செய்திடும் மலர்தான் இழந்தது ஏது
யார்யார் வாயால் எதுதான் சொல்லிட நல்லதைத் தேடு
யாவரும் இங்கே சோதரர் என்றிட பகைதான் ஏது
ஊர் என உலகம் சுருங்கிப் போனது பாரு
உறவும் உள்ளமும் சுருங்கிட காரணம் தேடு
ஏர்முனை பலம்பெற எல்லாம் நலம்பெறும் என்றே பாடு
இயற்கையை காத்திட வாழ்வும் நிலைத்திடும் பாரு
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
மறுமொழி இடவும்