தினம் தினம்
பயணங்களில்
நடைபாதைகளில்
பொதுவெளியில்
கைபேசியில்
சிந்துகின்றன
பல சிதறல்கள்!
காதலும்
சிணுங்கல்களும்!
தண்டல் வாங்கி
வட்டி கட்ட முடியவில்லை
என்கிறார் ஒருவர்!
விவாகரத்து செய்கிறேன்
என
காரமான பேச்சு!
யாரோ ஒருவனை
இகழ்ந்தும்
யாரையோ புகழ்ந்தும்
உரையாடல்கள்!
நேற்றைய
மது விருந்தின்
சாகசங்கள்!
சில
அன்பானவர்களின்
பிரிதல் மொழிகள்!
காத்திருத்தலின்
கடின தருணங்கள்!
என
கைபேசியில்
கதை பேசுகிறது
சமூகம்!
சுருங்கி விட்டதாம் உலகம்!
தொடர்பில்லாக்
காதுகளையும்
சென்றடைகின்றன
பாதுகாக்கப்பட வேண்டிய
பல
இரகசியங்கள்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com