இரயில் பயணத்தின்போது ‘முன்பதிவு இரயில் படுக்கைகளில் எந்த நேரம் வேண்டுமானாலும் படுத்து உறங்கலாமா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பதே பதில் ஆகும்.
முன்பு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்தம் 9 மணி நேரம் படுத்து உறங்கலாம். இப்போது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 8 மணி நேரம்தான் உறங்கலாம்.
அதன்பிறகு, உட்கார்ந்துதான் போக வேண்டும். அடுத்தவருக்கு இடையூறு தரக் கூடாது.
நடுப்படுக்கையில் உள்ள பயணிகள் கீழே இறங்கி உட்கார வேண்டும். கீழ் படுக்கையில் இருப்பவர்கள் எழுந்து உட்கார வேண்டும்.
இந்த விதிகளை ஒருபயணி மீறினால், அதற்காக இரயில்வேத்துறையிடம் குற்றம் சாட்டலாம்.
இரவு 10 மணிக்கு விளக்குகளை அணைத்து விட வேண்டும். மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் சிறிய விளக்குகள் பயன்படுத்திப் படிக்கலாம்.
சத்தமாக பேசவோ இசை கேட்கவோ கூடாது. ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தலாம்
உணவு மற்றும் இதர விற்பனையாளர்கள் இரவு நேரங்களில் நடமாடக் கூடாது.
இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகரைத் தொடர்பு கொள்ளக் கூடாது.
இருப்பினும், மருத்துவச் சிக்கல்கள், பாதுகாப்புக் கவலைகள் அல்லது படுக்கைத் தகராறுகள் போன்ற நிலைகளில் டிக்கெட் பரிசோதகரைத் தொடர்பு கொள்ளலாம்.
தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. வெடிபொருட்கள், எரியக்கூடிய பொருட்களான
பெட்ரோல், மண் எண்ணெய், எரிகாற்று உருளைகள், பட்டாசுகள், நச்சு இரசாயனங்கள் அல்லது அரிக்கும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மீறினால் சிறைத்தண்டனை.
ஓடும் ரயிலை நிறுத்தும் சங்கிலியை இழுப்பதற்கு உறுதியான காரணம் இருக்க வேண்டும்.
ஏசி பெட்டியில் 70 கிலோ, ஸ்லீப்பர் கிளாஸ் 40 கிலோ மற்றும் இரண்டாம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் பெட்டியில் 35 கிலோ லக்கேஜ்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம்.
கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன் ஏசி வகுப்பில் 150 கிலோ, ஸ்லீப்பரில் 80 கிலோ, மற்றும் இரண்டாவது வகுப்பு உட்கார்ந்து செல்லும் பெட்டியில் 70 கிலோ பை மற்றும் சாமான்களை எடுத்துச் செல்லலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!