இரவு …
நிலவின் வெளிச்சத்தில்
அவளின் கால் கொலுசின்
ஓசை!
அவளின் கால் கொலுசின்
ஓசை!
இரவு …
விண்மீன்கள் துள்ளும் அழகில்
அவளின் பறந்து விரிந்த
கண்கள்!
ஆம்….
இரவு…
காதலை சொல்லும்…
களவு செய்யவும் தூண்டும்…
உறக்கத்தை தரும்!
சிலரது உறக்கத்தை தடுக்கும்!
பயத்தை உருவாக்கும்….
புதிய பரிணாமம் வெளிப்படும்…
இரவு….
சிலருக்கு குளிர்ச்சி!
சிலருக்கு மகிழ்ச்சி!
சிலருக்கு முதிர்ச்சி!
கவிஞர். பழ.தமிழன் சின்னா
புதுக்கோட்டை