இரவில் ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து பார்க்கணும்
இயற்கையைக் கற்றுக்கொடுத்திட கேட்கணும்
உறவென நிலவினை நம்முடன் இருந்திடச் செய்யணும்
ஒளியினை குறைவின்றி தந்திடச் சொல்லணும்
‘அர அர’வென தவளைகள் கூட்டமாய் என்னதான் பாடுதோ?
அமைதியாய் இருக்கும் மரங்களும் அதற்கு ஆடுதோ?
சிறகினால் பறவைகள் ‘படபட’வென்றெ தாளம் போடுதோ?
சின்னச்சிறிய குஞ்சுகள் கூட சேர்ந்திசை பாடுதோ?
வரமென இரவும் கற்றுக்கொடுத்திட இருக்கும் போதிலே
வருகின்ற தூக்கத்தை விரட்டிடல் தவிர வேறென்ன தோணும்?
திறனுடன் மனம் பலம்பெற இயற்கையை போற்றணும்
தீமைகளில்லா உலகம் தானென இரவே மாற்றணும்
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)