எனக்கு இராமனைப் பிடிக்கும்
என் மதக் கடவுள் என்பதால் மட்டுமல்ல
இன்று போய் நாளை வா என
இராவணனைச் சொன்னதாலும்!
தயாராக இல்லாதவனை, ஆயுதம் இழந்தவனை,
தூக்கத்தில் இருந்தவனைத் தாக்கினார்கள்;
அவன் பெயர் சொல்லி அகமதாபாத்தில்.
இப்போதெல்லாம் இராமனைக்
கொஞ்சம் பிடிப்பதில்லை!
– வ.முனீஸ்வரன்