தனித்து இருப்பது பற்றிய
அனாதி காலங்களில்
தேர்வுகள் அர்த்தமிழந்து போகின்றன
இன்னும் நான் இருக்கிறேன்
என் ஞாபகத்தில்
ஒரு மனிதனைப் போல்
அல்லது கனிவான என் பார்வையில்
நான் புலப்படுவேன் என்று
ஒரு கதையின் நாயகன்
நீரில் முழுகுவது போலவும்
அக்காட்சியைப் பார்த்தவன்
போலவும் ஆகிறேன்
அர்த்தமற்ற வார்த்தைகளினால்
என் மௌனம் கோலோச்சுகிறது
எனக்கு இருக்கும் இடத்தை
நான் அலங்கரித்துக் கொள்வதில்லை
வேறு வழியின்றி
எனக்குத் தோதாக ஆக்கிக் கொள்கிறேன்
மேஜையின் மீது
மற்றும் சுவரில் தொங்கும்
புகைப்படத்திற்குமான தூரத்தை
விலகலை நான் பார்த்தேன்
என்னைக் காப்பாற்றிக்கொள்ள
விரும்பாத ஒரு பள்ளத்தில் இருக்கிறேன்
நீடித்த இருப்பிலிருந்து
உதிர்கிறேன் நான்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!