காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?
போதும் போதும் சுகவாசம்
சோம்பிக் கிடந்தால் வனவாசம்
தேடியோடி உழைத்து விட்டால்
கோடி உன்னை நாடி வரும்
நண்பா இனியும் வெதும்பாதே
சும்மா இனிமேல் இருக்காதே
உன்பால் கொண்ட அன்பாலே
பண்பாய் சொன்னேன் தப்பாதே
நொடியும் பொழுதும் நகர்ந்து விடும்
நொடிந்திருந்தால் வாழ்வு சிதைந்து விடும்
முடியும் வரை முயன்று விட்டால்
விடியல் தோன்றி இருளகலும்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!