கூட்டத்தில் ஒருவனாய் நின்று
எட்டும் தூரத்தில் நீ இருந்தும்
எட்டாக் கனி போல்
இரு விழி கணினியால்
நகல் எடுத்துக் கொண்டிருக்கிறேன்
உன் அழகை!
அப்படி இருந்தும் கூட
காந்தத்தின் இரு துருவப் பிணைப்பு விதியை
மீறி விட்டு செல்கிறது உன் கருவிழிகள்!
ஆனால் கூட இது தவறில்லை
என் கருவிழி
உனது கரு விழியைப் பற்றும் நேரம்
பிணைப்பு விதி சமனாகும்!
அந்நாள் வெகுதொலைவில் இல்லை!!
அ.சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188