இறகா? சிறகா?

இறகா? சிறகா?

எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்

இருந்தால் தானே சிறப்பு!

சிறகாய் இருந்த போது

விரிந்து சிரித்திடக் கண்டு

வெண்மேகம் முகம் கருத்து

மழையாய் விழுந்தாள் பூமியிலே!

ஒற்றை இறகாய் இருந்த போதும்

புதுப்புத்தக அணைப்பில்

உன்னை வைத்து தினமும் கண்டு

மகிழ்ச்சியில் திளைத்தது குழந்தையுமிங்கே!

இறகோ… சிறகோ…

எதுவாய் இருப்பினும்

உயிர்ப்புடன் இருப்பதே சிறப்பு!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942