கண்ணே, கவியே, காதலே என்று
உன்னை சலித்திடாமல் தமிழிலும்
ஸ்வீட்ஹார்ட், பேபி, மை லவ் என்று
ஆங்கிலத்திலும் என்னால் கிறங்கடிக்க முடியும்
ஆனால் நான் அதை செய்வதாய் இல்லை
ஜி.பி.எஸ், கூகுள் மேப்ஸ் யை விட மிக எளிதில்
உன்னை நான் கண்டுகொள்ள முடியும்
ஆனால் நான் உன்னைக் கண்டு கொள்வதாய் இல்லை
தெருவிலும், அலுவலகத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும்
உன் அழகை பல்லாயிரம் பேர் ரசித்தாலும்
என் ஒரு காதல் பார்வை அவைகளை தின்னும் என்று
எனக்கு தெரியும் ஆனால் நான் உன்னை பார்ப்பதாய் இல்லை
காய்ந்து கிடக்கும் உன் தேகமோ என் ஒருவிரல் பட்டால்
சொக்கிப்போகும் என்று எனக்கு தெரியும்
ஆனால் நான் உன்னை தொடுவதாய் இல்லை
சினிமாவில் கொஞ்சும் கதாபாத்திரங்கள் போல
காதல் காதல் காதல் என்று உன் கால் பாதங்களில்
என்னால் சரணடைய முடியும்
ஆனால் நான் சரணடைவதாய் இல்லை
உன்னோடு வாழ்ந்த நாட்களையும், உன் குயில் குரலையும்,
வாடிக்கையும், விழியின் வளைவையும் எளிதில்
என் இறுதி நாட்களுக்கு அசைபோட கடத்திச் செல்ல முடியும்
ஆனால் நான் கடத்திச் செல்வதாய் இல்லை
நீ கேட்கும் வாழ்க்கையை, விவாகத்தை, குழந்தைகளை, முத்தங்களை
என் வாழ்வின் முடிவு இரண்டு நாட்களுக்குள் இல்லை என்ற
பொய்யை எளிதில் உன்னிடம் கொடுத்திட முடியும்
ஆனால் நான் அதை செய்வதாய் இல்ல
க. சஞ்ஜெய்
7904308768
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!