இறுதி வரும்

பொய்மையில் வாழும்

புகழ்பெற ஏங்கும்

மெய்யிலா மனிதர்

மேதினிக்குப் புண்

 

உய்வதில்லை வாழ்வில்

உணர்வதில்லை மனதில்

துய்ப்பதெல்லாம் சிலநாளில்

துன்பம் தரும்

 

கொய்பவன் காலன்

கொடுப்பவன் இறைவன்

செய்த‌ வினையெலாம்

சேர்ந்தே இறுதி வரும்!

– பவானி

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.