தூணிலும் இருப்பர் துரும்பிலும் இருப்பர்
மானுடன் கோரிக்கையால் இறை துரும்பாயிருப்பர்
கலக்கம் வரும் வேலையில் மட்டும்
மனம் தேடுவது இறை
கலக்கம் கலைந்தவுடன் மகிழ்வில்
மனம் நாடுவது இரை
இல்பொருள் உவமையணியாய் மறையில் படர்ந்து
கரைநாடும் மானுடர் மனதில் உறையுள் கொண்டது இறை
உயிரின்றி உருகொண்டோ உருவற்ற நிலைகொண்டோ
உணர்வலையால் உளம் சங்கமிக்கும் உயர்விடம் இறை
மெய்மேவிய உயிர் உள்ளொழிந்து மெய்யை இயக்குவது போல்
இறையை உயிராய் நினைக்கும் மானிடனை கறைபடியா
மானிடனாய் இயக்குவது இறை
நம்பிக்கை கொண்ட மனிதனுக்கு இரையே இறை
நம்பிக்கையற்ற மனிதனுக்கும் இரங்கும் இறை
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353