இலங்கை அரசுக்கு நன்றி

இலங்கை அரசு தமிழர்களிடம் இருந்து எடுத்துக் கொண்ட 700 ஏக்கர் நிலத்தைத் திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளது. இதற்காக இலங்கை அரசை அனைவரும் பாராட்டலாம்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரின் போதுதான் நிறைய நிலங்கள் இலங்கை அரசால் கைபற்றப்பட்டன.

தற்போது போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்தும் ஆயிரக்கணக்காண தமிழர்கள் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கை அரசு ஏற்கனவே ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் திரும்ப அளித்துள்ளது. தற்போது எழுநூறு ஏக்கர் நிலத்தைத் திரும்ப அளிக்க முன் வந்துள்ளது பாராட்டத்தக்க செயலாகும்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக திரியும் தமிழ் மக்கள் வாழ்வில் சிறிதேனும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் இது போன்ற தன்னால் எளிதாகச் செய்யக்கூடிய விசயங்களை இலங்கை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

அதிக செலவின்றி அதிக முயற்சியின்றி செய்யக் கூடிய அதே நேரத்தில் மக்களுக்கு நிறைய நன்மை தரும் வகையிலான செயல்களை உடனே செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.