இலையா? கிளையா? வேரா?
நம் வாழ்வினில் இத்தனை பேரா?
ஈரம் இருக்கும் வரையினில்
உண்டு உறங்கி நிழல் கொடுத்து
காயும் வேளையில் உதிர்ந்திடும் இலையென
உறவாய்ப் பலருண்டு…
இரவும் பகலும் நம்மை தாங்கினாலும்
சிறு புயலோ காற்றோ (பிரச்சினைகள்)
வரும் போது ஒடிந்து விழுகின்ற
கிளைபோல் உறவாய் சிலருண்டு…
அமைதியாய் மறைந்து நமைத் தாங்கி
நீரினைத் தேடி உணவாக்கி
நம் உயர்வே குறிக்கோள் என வாழும்
வேராய் இருக்கும் உறவே நமக்கு வரமாகும்!
இலைகள் புதிதாய் நிறைய வர
வணக்கம் சொல்லி வரவேற்போம்
கிளைகள் என்றும் நிலைத்திருக்க
உணர்வுடன் மகிழ்ந்து களித்திருப்போம்
வேர்களை என்றும் போற்றிடுவோம்!
வெற்றிக் கனிகளைப் பெற்றிடுவோம்!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942