இளமை

இளமை என்பது என்ன‌?

எப்போதும் உற்சாகமாக,
துடிப்பாக, மகிழ்ச்சியாக,
எப்போதும் ஒழுக்கமாக
இருப்பது தான்
இளமை!

காலம்
யாருக்காவும் காத்திருப்பதில்லை.
ஒவ்வொரு விநாடியும் மதிப்பு மிக்கது.
நேரம்
என்னும் செல்வத்தைக்
கவனமுடன் செலவழியுங்கள்.

ஓய்வில்லாமல்
உழைப்பதும் உதவுவதும் தான்
வாழ்க்கை.
படுத்துக் கிடப்பவனுக்கு
வாழ்க்கை ஒரு சுகம்.
எழுந்து நடப்பவனுக்கு
வாழ்க்கை ஒரு வரம்.

ஒவ்வொரு நல்ல செயலும்
நல்ல எண்ணமும் முகத்திற்கு
அழகையும் ஒளியையும் அதிகப்படுத்தித் தரும்.
இளமை இன்னும் கூடும்.