பொய்யான போலி மனிதருக்காக
மெய்யானவரைக் கேலி செய்து
இழந்து விடாதீர்
திரும்பக் கிடைக்காத களம்
உறவான காலம்
இழந்து விடாதீர்
என்றும் இழப்பதில் கவனம்
அன்பு கிடைப்பது கடினம்
இழந்து விடாதீர்
பயத்தைப் போக்க முயலுங்கள்
பயம்தான் உங்கள் பலவீனம்
தைரியத்தை இழந்து விடாதீர்
பொறுமை வாழ்வின் அருமை
இமைப்பொழுதும் அதனை
இழந்து விடாதீர்

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்