எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?

எது தான் கடவுள் இல்லை? எங்கு தான் கடவுள் இல்லை? என்பார்கள் ஆன்மிக அன்பர்கள்.

எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை? என்பார்கள் அரும்பெருங் கவிஞர்கள்.

கவிதைகளின் வெளிப்பாடுகள் காலத்தால் நிர்ணயிக்கப்படாமல், வாசிப்பின் நேசிப்பை அடித்தளமாகக் கொண்டே காலகாலத்திற்குமானதாய் வடிவம் கொள்கின்றன. தீராப்பசியுடன் அவை அலைகின்றன; எது கிடைத்தாலும் செரிக்க ஆயத்தமாகி விடுகின்றன.

சிறிதும் பெரிதுமானது என்கின்ற அளவீடுகளற்ற உள்ளீடுகளை, சாயமற்றுத் தன் பரிபூரண அழகைக் கவிதை காலந்தோறும் விதைத்துக் கொண்டே செல்கிறது.

இவ்வகையில் அர்த்தம் நிறைந்து, மாறுபட்ட கருப்பொருளோடு, வடிவச் செறிவோடு, புதியநடைச் செருக்கோடு வந்திருக்கிறது முனைவர் மரியம் தெரசா அவர்களின் ’இவைகள் பேசுகின்றன’ எனும் கவிதைத் தொகுப்பு.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும், இல்லத்தில் நாம் அனைவரும் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் தாம். அவை பயன்பாட்டளவில் தான் நம் கண்களை மொய்த்தன. ஆனால், கவிஞருக்குப் பல்வேறு கவிதைகளை உண்டாக்கும் கருப்பொருளாக அமைந்திருக்கின்றன.

சுற்றிலும் எதையும் அதன் தகுதிப்பாட்டோடுக் கவிதைக்குள் பொதிந்து போய்விடச் செய்யும் மந்திரக்கோலை எப்பொழுதும் கவிஞர் வைத்திருப்பார் போலும்.

கவிஞரின் கற்பனை ஓட்டம் எங்கும் எதிலும் வியாபித்து வாசகனை வசியப்படுத்தும் அலங்கார ஊர்திகளாகக் கவனப்படுத்துகின்றன. புதியபாதை ஒன்றில் கவிதைத் தாய் பவனி வருகின்றாள்.

கவிஞர் மரியம் தெரசா அவர்களின் இந்த நூலில் கவிதைகளை அடையாளம் காணும் பொழுது, அவற்றை மூன்று நிலைகளில் பிரித்து வகை தொகையாக அறிய முடிகின்றது. அவையான,

1.படிம உள்ளீடுகள்

2.விடுபுதிர் உள்ளீடுகள்

3.படிமம் மற்றும் விடுபுதிர் உள்ளீடுகள்

என்பனவாகும்.

படிம உள்ளீடான கவிதைகள் இவற்றில் பெரும்பான்மையாக இருக்கின்றன. ஒருபொருளை அதோடு தொடர்புடைய ஒத்த பண்புள்ள ஒன்றுடன் உவமைப்பது தான் கவிதையின் தொடர் வரலாறு. அதில் ஒன்றைக் கூறி மற்றொன்றைப் புரிந்து கொள்ள வைப்பது படிமமாகிறது

சங்கம் தொட்டு படிமமாகக் கூறுவது இயல்பென்றாலும், கவிஞரின் படிமக் காட்சிகள் வாசகனைப் சிறிதாய் புன்முறுவல் பூக்கச் செய்து உளமகிழச் செய்கின்றது.

கவிதைகளை வாசித்து முடித்த பின்பு, பார்க்கும் இல்லப் பொருள்களை ல்லாம் இக்கவிஞரின் கண்கொண்டே காண முடிகின்றது என்பது கவிஞரின் பெரு வெற்றியாகும்.

கவிதையை முதலில் படியுங்கள். அந்தக் கவிதை எதைப் பற்றியது என்று அறிய அடைப்புக்குறிக்குள் பாருங்கள்.

                                     (குடை)
                                     (முறம்)
                                     (மண்பாண்டம்)

                   (சுவர்)

                   (குளிர்சாதனப் பெட்டி)

இக்கவிதைகள் படிமங்களாக, இந்த நூலில் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. இவைபோல் இன்னும் ஏராளம்.

சில இடங்களில் ஹைக்கூ வடிவமாகவும் கவிதைகள் உள்ளன; விடுபுதிர்க் கவிதைகளும் தென்படுகின்றன. உதாரணத்திற்கு,

                   ( நாற்காலி)

                   (துடைப்பம்)

என்பன போன்ற விடுபுதிர் உள்ளீடுகளும் இத்தொகுப்பில் உள்ளன. இவை இரண்டும் (படிமம் & விடுபுதிர்) கலந்ததாகவும் கவிதைகள் உள்ளன.

மொத்தத்தில் ‘புதியன புகுதல்’ என்பதற்கு ஏற்பக் காலத்தின் புது வடிவமாய் கவிஞர் மரியம் தெரசா அவர்களின் எண்ணத்தில் உதித்துச் சிறப்பாய்ச் சிந்திக்க வைக்கின்றது ’இவைகள் பேசுகின்றன’ கவிதை நூல்.

ஆம்!

எது தான் கவிதை இல்லை?

எங்கு தான் கவிதை இல்லை?

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

பாரதிசந்திரன் அவர்களின் படைப்புகள்