இ பேப்பர் லேண்ட்

இ பேப்பர் லேண்ட்

உலக இலக்கியம் மற்றும் செய்தி படிக்கத் தேட வேண்டிய அருமையான தளம் “இ பேப்பர் லேண்ட்” இணையதளமாகும்.

இன்று மக்கள் அனைவரும் அனைத்துச் செய்தித்தாள்களையும் படிக்க அவர்களுக்கு நேரம் ஒத்துழைப்பதில்லை. விரைவு வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டுருக்கிறார்கள்.

அவ்வாறு இருக்கும் சமயத்தில் இணையத்தில் ஒரே இடத்தில் படிக்க இத்தளம் மிகப்பெரும் வசதியைச் செய்துள்ளது. அனைத்து மொழிகளில் வரும் செய்தித்தாள்களைப் படிக்க ஏதுவாக இது உள்ளது.

இத்தளம் குறித்து அவர்கள் கூறுவதாவது

“இது பல்வேறு மொழிகளில் தினசரி, வாராந்திர, இரு வார மற்றும் மாத அடிப்படையில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் தொகுப்பு (ஆன்லைன் செய்தித்தாள்கள்).


ePapers என்பது செய்தித்தாள் அச்சு பதிப்பின் பிரதிகளாகும்.
இங்கே நீங்கள் உங்கள் செய்தித்தாள்களை எளிதாக படிக்கலாம்; உங்களுக்கு பிடித்த ஈப்பரைத் தேர்வுசெய்து, அதைக் கிளிக் செய்து, இன்றைய அச்சு பிரதிகளைப் பெறுவீர்கள் – மிகவும் எளிமையானது”

இத்தளத்தில் பெரும் பிரிவுகளாக, செய்தித்தாள்கள் மற்றும் மாத இதழ்கள் அந்தந்த மொழிகளில் பல்கிக் கிடக்கின்றன. அதாவது,

வகை அடிப்படையில் பத்திரிக்கைகள்:

அரசியல்

பொழுதுபோக்கு

விளையாட்டு

கல்வி

உடல் நலம்

குழந்தைகள்

பெண்கள்

விவசாயம் எனப் பலவகையான பத்திரிக்கைகள் கிடைக்கின்றன.

 மொழியால் பத்திரிக்கைகள்

தமிழ்

தெலுங்கு

கன்னடம்

மலையாளம்

ஆங்கிலம்

இந்தி

குஜராத்தி

பஞ்சாபி

மராத்தி

தமிழில் கிடைக்கும் பத்திரிக்கைகள்

தினமலர்

தினமணி

தினகரன்

தினத்தந்தி

மாலைமலர்

தினக்குரல்

உதயன்

வீரகேசரி

தினபூமி

தமிழ் முரசு

விடிவெள்ளி

தினச்செய்தி

முரசொலி

தாய்மொழி

தமிழ் மிர்ரர்

தினச் சுடர்

தீக்கதிர்

தின இதழ்

இந்து தமிழ்

மாலை முரசு

ஐபிசி தமிழ்

மக்கள் குரல்

போரூர் டைம்ஸ்

இந்த இனையதளத்தைப் பயன்படுத்தி தினசரிகளைப் படித்து மகிழ www.epapersland.com எனும் சொடுக்கியைச் சொடுக்கவும்.

(இணையம் அறிவோமா?  தொடரும்)

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

Comments

“இ பேப்பர் லேண்ட்” அதற்கு 2 மறுமொழிகள்

  1. Dr. Veeramani Ganesan

    அருமையான உபயோகம் மிகுந்த தகவல் களஞ்சியம்..
    நன்றி அய்யா..

  2. முனைவர் எ. பாவலன்

    அருமையான பதிவு. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் அத்துணை தகவல்கள் கிடைப்பதில் காலமும் நேரமும் விரையமாகமல் தவிர்க்க படுகிறது.

    சரியான காலமறிந்து சரியான தகவல்களை தேடித்தேடி எழுதுவதை பெரிதும் வரவேற்கிறேன்.

    நீங்கள் செய்யும் இந்த அளப்பரிய பணி வரலாற்றில் மிகப்பெரிய பதிவு ஆகும்.

    ஒரு செய்தியை எப்படி சொன்னால் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு உங்கள் எழுத்துக்கள் ஒரு சாட்சி.

    மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் அய்யா

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.