ஈதல் மீது காதல் கொள்ளுங்கள்
ஈயென இரக்கும் முன் கொடுங்கள்
ஈகை செய்தே புகழை அள்ளுங்கள்
ஈகை செய்தே இல்லாமை தள்ளுங்கள்
ஈரமனதோடு ஈந்து வாழுங்கள்
ஈகை இல்லாதவருக்கே என எண்ணுங்கள்
ஈகை செய்ய எப்போதும் முயலுங்கள்
ஈகையே வாழ்க்கை என உணருங்கள்
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்