ஈசல் – கவிதை

ஈசல்

நல்ல மழை நாளில்

ஒரே நேரத்தில்

பொல பொல வென

பிறந்து

பறந்து…

சிறகுகள் உதிர

தரையில் புரண்டு…

அடுத்த சில

மணித்துளிகளில்

பிற உயிர்களுக்கு உணவாகவும்

மறைந்தே போயினும் “ஈசல் “

உற்சாகமாக உலகை வலம் வரும்

இறுதி வரை

மகிழ்வாய் பறக்கும் …

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்… என

குறைவில்லா மகிழ்விற்கு

தடையில்லா

மனம் வேண்டும்

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

Comments

“ஈசல் – கவிதை” மீது ஒரு மறுமொழி

  1. Jeyaperumal

    அரு​மை உண்​மை

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.