பிறப்பு
மெய்யுடன் மெய்சேர
உயிர் தோன்றும் அதிசயம்
அம்மா
அழகான அன்பான அனைவருக்குமான
அடிமை தேவதை
அப்பா
தேவையின் போது மட்டுமே
கண்ணுக்குத் தெரியும் தெய்வம்
அக்கா
பிறந்த வீடோ புகுந்த வீடோ
அவள்தான் வள்ளல்
தங்கை
தந்தைக்கோ செல்லமகள்
தமையனுக்கோ தொல்லை நகல்
உடன்பிறப்புகள்
அண்ணன் தம்பி தொட்டால் சுருங்கி
அக்காள் தங்கை தண்டவாளங்கள்
நட்பு
சான்றோர் நட்பு வளர்பிறை
கூடா நட்பு தேய்பிறை
மனம்
புகழ் போதை தீரா
கனவுகளின் சாம்ராஜ்ஜியம்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!