உங்களின் ஆட்டத்தில்
நீங்கள் உருட்டி விளையாடும்
பகடைகளின் எண்ணிக்கைக்கேற்ப
நகர்த்தும் ஆட்டக்காய் நான்!
மேய்ப்பவனின் ஆடுகள்
நேசிப்பதற்கானவை மட்டுமன்று
சூழ்நிலைகளின் தேவைக்கேற்ப
பலிக்கொடுக்கவும் தான்!
நானும் அப்படியே
உங்களின் எளிய கண்களுக்கு
மத்தியில்!
கவிஞர் விசித்திரக்கவி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!