உடலுக்கும் உண்டு கால அட்டவணை

உடலுக்கும் உண்டு கால அட்டவணை என்பது நிச்சயமான ஒன்று. இந்த அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி நாம் நடந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.

இன்றை சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ, எல்லோரும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இந்த கால அட்டவணை.

2 மணி நேரங்களுக்கு ஒருமுறை நம் உடலின் குறிப்பிட்ட உறுப்பானது அதிகமாக இயங்குகிறது. வாருங்கள் அது பற்றிப் பார்க்கலாம்.

 

நேரம் உடலுறுப்பு செய்ய வேண்டியவை
1 விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம் இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்தால் ஆயுள் நீடிக்கும்.
2 காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடல் நேரம் இந்த நேரத்தில் காலை கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது.
3 காலை 7 மணி முதல் 9 மணி வரை இரைப்பையின் நேரம் இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு சீரணம் ஆகும்.
4 காலை 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல் நேரம் வயிற்றில் விழும் உணவை செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதனையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர்கூட குடிக்கக் கூடாது.
5 காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இதயத்தின் நேரம் இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாக பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
6 பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை சிறுகுடல் நேரம் மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
7 பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீர்ப்பையின் நேரம் சிறுநீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
8 பிற்பகல் 5 மணி முதல் இரவு 7 மணி வரை சிறுநீரகங்களின் நேரம் தியானம், இறைவழிபாடு செய்வதற்கு உகந்த நேரம்.
9 இரவு 7 மணி முதல் 9 மணி வரை பெரிகார்டிய நேரம் இது இதயத்தை சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவிற்கான நேரம்.
10 இரவு 9 மணி முதல் 11 மணி வரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரை அமைதியாக உறங்கலாம்.
11 இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பித்தப்பையின் நேரம் அவசியம் உறங்க வேண்டும்.
12 அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் நேரம் இரத்தத்தைக் கல்லீரல் சுத்தம் செய்யும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

இரவு 9 மணிக்கு உறங்கச் செல்ல வேண்டும். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.

இரவு கண்விழித்தல் நாட்பட்ட நோய்களான உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.

உடலுக்கும் உண்டு கால அட்டவணை என்பதை உணர்ந்து செயல்பட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.