உள்ளார்ந்த உணர்வுகளை வார்த்தை ஆக்கிட முனைகிறேன்
உணர்வில் தெளிவில்லையோ வார்த்தையில் சக்தியில்லையோ
என் உணர்வுகளை வார்த்தை ஆக்கிட என்னால் இயலவில்லை
பிரபஞ்சம் ஒயாமல் ஒரு செய்தியை சொல்லக் காத்திருக்கிறது
பேதை மனிதன் அதன் பரிபாஷையினை உணர வழி இல்லை
அறிதலுக்கும் அறிய விளைவதற்கும் உள்ள வினையே வாழ்க்கை
எதை அறிவது?
இருத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டு இருக்கிறது
என் மனம் போடும் கற்பிதங்களுக்கு பஞ்சமில்லை
எது உண்மை என உணர வழியுமில்லை
என் அப்பிராயங்கள் தினம்தினம் மாறுகின்றன
மாற்றங்களை நோக்கிய எனது பயணத்தில்
கரைகின்றன என் மனக் கற்பிதங்கள்
இருத்தலை உள்ளபடி உணர உள்ளார்ந்த தாகம் தேவை
கற்பிதங்களைக் கலைந்து விட்டு வெறுமையாக இருக்கையில்
இந்த பிரபஞ்சத்தின் அருட்கொடை என்னில் பொழிந்தது
ஓர் உண்மை எனக்குப் புரிந்தது
கடலை பற்றிக் கடலில் உள்ள ஒரு துளி நீர்
என்ன அப்பிராயம் சொல்ல முடியும்
இங்கு உணர்தல் என்பது நாம் பிரபஞ்ச இருப்பை உணர்தல்
– சிறுமலை பார்த்திபன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!