உணவு இரைப்பையில் இருக்கும் காலம்

நாம் உண்ணும் உணவு இரைப்பையில் இருக்கும் காலம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்.

நமது உடலுக்கு தேவையான ஆற்றல் நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. அவற்றின் செரிமானத்திற்கான கால அளவு வேறுபடுகிறது.

எனவே ஒரே நேரத்தில் பழங்கள், காய்கறிகள், சோறு உள்ளிட்டவைகளை உண்ணக் கூடாது.

மேற்கூறியவைகளை ஒரே நேரத்தில் உண்ணும் போது செரிமானத்தில் பிரச்சினை உண்டாவதோடு, உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்துக்கள் குடலால் சரிவர உறிஞ்சப்படுவதில்லை.

எனவே எந்த உணவுப் பொருள் எவ்வளவு கால அளவு இரைப்பையில் தங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.

வாருங்கள் உணவுப் பொருட்கள் இரைப்பையில் இருக்கும் கால அளவை அறிந்து கொள்வோம்.

 

வ.     எண் உணவுப் பொருள் இரைப்பையில்            இருக்கும் காலம்
1 பழச்சாறு 15-20 நிமிடங்கள்
2 சமைத்த மீன் 45-60 நிமிடங்கள்
3 காய்கறி சாலட் 60 நிமிடங்கள்
4 உருளைக்கிழங்கு 90-120 நிமிடங்கள்
5 சமைத்த கோழி 90-120 நிமிடங்கள்
6 சமைத்த மாட்டுக் கறி 180 நிமிடங்கள்
7 ஆட்டுக்கறி 240 நிமிடங்கள்
8 பன்றிக்கறி 300 நிமிடங்கள்
9 சமைத்த காய்கறிகள் 40 நிமிடங்கள்
10 முந்திரி,   பாதாம்            உள்ளிட்ட கொட்டை   வகைகள் 180 நிமிடங்கள்
11 பால் மற்றும் பால்    பொருட்கள் 120 நிமிடங்கள்
12 பச்சை காய்கறிகள் 30-40 நிமிடங்கள்
13 தண்ணீர் 0 நிமிடங்கள்

 

மேலே குறிப்பிட்டுள்ள உணவுப் பொருட்கள் இரைப்பையில் இருக்கும் காலம் அறிந்து கொண்டு அந்த கால அளவு கழித்து அடுத்த உணவுப் பொருட்களை உட்கொள்ளவும். இதனால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.