உணவு கொட்டிக் கிடக்கிறது
குப்பையில் கொட்டுகிறார் ஒரு சிலர்
பட்டினி கிடக்கிறார் பலர்
அம்மாவை நாம் மதிப்பதில்லை
அவர் தயார் செய்த
அன்னத்தையும் மதிப்பதில்லை
விவசாயியை மட்டுமல்ல
கால்நடைகளை மட்டுமல்ல
உணவால் எண்ணற்ற உயிர்களைக்
கொல்லும் மனிதனே!
தானத்தில் சிறந்தது அன்னதானம்
பசிப்பிணி போக்கும் மருத்துவனாய்
மனிதநேயக் கடவுளாய் வாழ்!
உனக்கும் அழிவு ஒருநாள் ஏற்படலாம்
உணவை வீணாக்காதே!
சு.ஜெயசித்ரா
இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி
சிவகாசி