கரும்பு இருக்கும் இடத்திலே
எறும்பு உண்டு மொய்க்கவே
கண்ணன் தின்னும் உணவிலே
வெண்ணெய் உண்டு முதலிலே
தோசை சுட்டால் சுர் என
ஓசை உண்டு கேட்கவே
மீசை வெள்ளை ஆகியும்
ஆசை உண்டு வாழவே
துஷ்டனான பையனால்
கஷ்டம் உண்டு வீட்டிலே
தெம்பு இல்லா பாட்டிக்கு
கம்பு உண்டு கையிலே
-அழ.வள்ளியப்பா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!