களைப்பில் அன்று மண்ணும் தூங்கிக் கிடந்தது
காற்றும் அன்று சோர்வாகிப் போனது
உழைப்பு இல்லாமல் என்ன இங்க இருக்குது
உண்மை உணர மட்டும் நாடு தயங்குது
கிழக்கு மலை சாரலிலே துளிர்க்குது
கீழ்வானம் அதனைக் கண்டு சிரிக்குது
வழக்கமாக ஓடும் நதி நடக்குது
வந்து செல்வம் நம்மை வாழ வைக்குது
குளங்கள் குட்டைகள் மழையாலே நிரம்புது
கூட்டம் கூடி தவளைகளும் பாடுது
அழகழகா மண்ணில் விதையும் முளைக்குது
அதனைக் கண்டு மனது வானில் பறக்குது
மழைக்கு மண்ணில் காளான்களும் வெடிக்குது
மக்கிப் போன குப்பைக்கு உயிர் கொடுக்குது
மழை வந்து போன பின்னே
மனித உழைப்பே விளைச்சல் பெருக்குது
உழைப்பில்லாமல் என்ன இங்க இருக்குது
உண்மை உணர மட்டும் நாடு தயங்குது
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
மறுமொழி இடவும்