இயற்கை தந்த அழகான ஏரி அது
தாமரை அல்லி என
பூத்துக் குலுங்கிய
அந்த நாட்களில்
மாலை பொழுதெல்லாம்
தும்பிகளின் நடனம்
இரவு முழுவதும்
தவளைகளின் கச்சேரி என
இருந்ததுதான் இப்போது
அனைத்தும் இழந்து
கருநிறநீரால் கருகிக்கிடக்கிறது
பெருமழை ஒன்று
பெய்ததில் நன்னீரால்
நிரம்ப கழிவுகளற்ற
ஏரி மீண்டும் அழகாய் மின்னுது
நம் மனமும் நல்லெண்ணங்களால்
நிரம்ப அழகிய ஏரி போல் மாறிவிடும்
உண்மை…
தீய உணர்வுகளை தவிக்க
நல்லெண்ணங்களால் மனதை
நிரப்புவோம்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!