உண்மை பேச வேண்டும்!

உண்மை பேச வேண்டும்

நன்மை நமக்குச் சேரும்

துன்பம் வந்த போதும்

தூய உள்ளம் வேண்டும்

வாய்மை என்றும் வெல்லும்

வாழ்வில் வெற்றிச் சேரும்

பொய்யை வெறுத்து தள்ளு

மெய்யை வாழ்வாய் கொள்ளு

அகிலம் போற்றும் உன்னை

எதிலும் வெல்வாய் உண்மை

ஐயன் சொல்லை நம்பு!

ஐயம் வேண்டாம் கண்ணே!!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்