மதிலற்ற வீடுண்டு
மதியற்ற வானமுண்டோ?
வேலியற்ற நிலமுண்டு
வேரற்ற மரமுண்டோ?
நீரி்ல்லா குளமுண்டு
நினைவுகளற்ற நீயுண்டோ?
ஊற்றில்லா கிணறுண்டு
உன் நினைவற்ற நானுண்டோ?
அன்பே…
உதயமற்ற சூரியன்
ஒருபோதும் மறைவதில்லை
மறைவில்லா சந்திரன்
ஒருபோதும் உதிப்பதில்லை
இவ்விரண்டும் நிலையானவை
புவியின் இயக்கத்தால் நிலையற்று போனது…
மறைவில்லா என் அன்பு
மறைந்து இருக்கிறதே தவிர
காலத்தினால் நினைவால்
ஒருபோதும் உனை மறவாது…
அ.சதிஷ்ணா
8438574188